பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், மெட்ரோ ரயில் பழுது பார்க்கும் பணிகளில் உதவுவதற்காக ''ரோபோ நாய்'' ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.
'பெர்சிவல்' எனப் பெயரிடப்பட்ட இந்த ரோபோ நாய், 40 கிலோ எடையும், 3.2 அடி உயரமும் கொண்டுள்ளது.
நாய்களை போன்றே நான்கு கால்களில் நடந்துசெல்லும் இந்த ரோபோ நாய், மனிதர்களால் செல்ல முடியாத கடினமான பகுதிகளுக்குள் நுழைந்து பழுது நீக்கும் பணிகளில் உதவுகிறது.
ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் இந்த ரோபோவில், அகச்சிவப்பு சென்சார் கொண்ட 360° கேமரா பொருத்தப்பட்டுள்ளன.